ஒன்லைனில் 14 வயது சிறுமி என்று சந்திக்க சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
உலகம்செய்திகள்

ஒன்லைனில் 14 வயது சிறுமி என்று சந்திக்க சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share

ஒன்லைனில் 14 வயது சிறுமி என்று சந்திக்க சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில், இணையம் வாயிலாக சிறுமி ஒருத்தியுடன் பழகிவந்த ஒருவர், அவளை நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறி, அவளைக் காண்பதற்காக நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜெனீவாவிலிருந்து சுமார் 120 கிலோமீற்றர் பயணித்து அந்தச் சிறுமியைக் காணச் சென்ற அந்த 50 வயது நபருக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமல்ல, கூடவே அதிர்ச்சியும் காத்திருந்தது.

ஆம், அவர் இவ்வளவு நாளும் 14 வயது சிறுமி என்று நினைத்து இணையம் வாயிலாக பேசிவந்தது ஒரு பொலிசாரிடம் என்பது அப்போதுதான் அவருக்குப் புரிந்துள்ளது.

இப்படிச் சின்னப் பிள்ளைகளை ஆசை காட்டி மயக்கும் ஆண்களைப் பொறிவைத்துப் பிடிப்பதற்காகவே தனியாக பொலிசார் இருக்கிறார்கள்.

Neuchatel வரை பயணம் செய்து வந்த அந்த நபரை, அங்குள்ள பொலிசார் பிடித்து சம்பந்தப்பட்ட துறை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...