இலங்கை
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி
இணையம் மூலம் பொது பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த செயற்பாடுகளை விரிவுபடுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2001ஆம் ஆண்டிலிருந்து இதுவரை காலமும் உள்ள பொதுப் பரீட்சைகளின் சான்றுப்பத்திரங்களை இணையம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர சான்றுப் பத்திரங்களை இணையம் மூலம்பெற்றுக்கொள்ளாலாம்.
இந்த புதிய முறைமை இன்று முதல் வெளிவிவகார அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும். உரிய சான்றுப் பத்திரங்களின் டிஜிட்டல் பிரதிகளை இதன்மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கும் போது தமது மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிடல் வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தை நாடி பெற்றுக்கொள்ள முடியும்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு - tamilnaadi.com