24 66c8fb877ce51
உலகம்

இரு நாடுகளுக்கான விமான சேவைகளின் இடைநிறுத்ததை நீடித்த ஜேர்மன்

Share

இரு நாடுகளுக்கான விமான சேவைகளின் இடைநிறுத்ததை நீடித்த ஜேர்மன்

டெஹ்ரான் (Tehran) மற்றும் டெல் அவிவ் (Tel Aviv) ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமான சேவைகளின் இடைநிறுத்தத்தை நீடிக்கவுள்ளதாக ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa) அறிவித்துள்ளது.

அந்தவகையில், பாதுகாப்புக் காரணங்களை கருத்திற்கொண்டு குறித்த இடைநிறுத்தத்ததை எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.

குறித்த விமான நிலையத்திலிருந்து லெபனானின் தலைநகரான பெய்ரூட்டிற்கு செல்லும் விமானங்கள் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டிருந்துது.

இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில் நிறுத்தப்பட்ட ஜோர்தானின் தலைநகரான அம்மான் மற்றும் ஈராக் நகரமான எர்பில் ஆகிய இடங்களுக்கான விமானங்கள் ஓகஸ்ட் 27 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று லுஃப்தான்சா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்கா (USA), கத்தார் மற்றும் எகிப்து (Egypt) ஆகிய மத்தியஸ்தர்கள் இராஜதந்திர முயற்சிகள் இஸ்ரேலையும் (Israel) ஹமாஸையும் காசாவில் போர்நிறுத்தம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதட்டங்களைத் நிறுத்துவதே இந்த முயற்சிகளின் குறிக்கோள் என லுஃப்தான்சா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 68625e1f18a45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட 93 வயது மூதாட்டி வழக்கில் திருப்பம்: 65 வயது நபர் கைது

பிரித்தானியாவில் 93 வயது மூதாட்டி கொலை வழக்கில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்ன்வாலில் உள்ள...

25 68625dd2b2d09
உலகம்செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்! 40 பேர் மரணம்..நாடொன்றில் கோர சம்பவம்

தான்சானியா நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 40 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்வில்...

25 6862559d23eb6
உலகம்செய்திகள்

நிரந்தர குடியிருப்பு அனுமதி தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள ஒரு செய்தி

கனடா தன் பொருளாதார புலம்பெயர்தல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, 2025ஆம் ஆண்டில், பொருளாதார இயக்கப் பாதைகள் முன்னோடித்...

25 686265d606f87
உலகம்செய்திகள்

டெல்லியில் முதல் முறையாக மேக விதைப்பு மூலம் செயற்கை மழை – எப்படி சாத்தியம்? என்ன பயன்?

டெல்லியில் காற்று மாசுவை குறைக்க செயற்கை மழை பொழிய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில்...