1 25
உலகம்

தரம் குறைந்த உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்கும் நிறுவனங்கள்! சர்வதேச அறிக்கை அதிர்ச்சி தகவல்

Share

தரம் குறைந்த உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்கும் நிறுவனங்கள்! சர்வதேச அறிக்கை அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

Access to Nutrition Initiative என்ற அமைப்பு 30 நாடுகளில், தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்யும் Nestle, PepsiCo, Unilever ஆகிய உணவு நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தது.

இந்த ஆய்வில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தரம் குறைந்த உணவுப் பொருட்களையே விற்பதாக தெரிய வந்துள்ளது.

ஐந்து மதிப்பெண்ணுக்கு 3.5 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற உணவுப் பொருட்கள்தான் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆனால் இந்த நிறுவனங்கள் விற்பனை செய்த உணவுப் பொருட்கள், அதிலும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 1.8 மதிப்பெண்ணாகவே இருப்பதாக அதிர்ச்சி அளிக்கிறது இந்த ஆய்வு.

இதுகுறித்து ATNI ஆய்வுக்குழு தலைவர் மார்க் விஜ்னே (Mark Wijne) கூறுகையில், “அரசுகள் உணவுத் தரம் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதுபோன்ற நிறுவனங்கள் ஏழ்மை நாடுகளில் என்ன மாதிரியான பொருட்களை விற்பனை செய்கிறதென்றே தெரியவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு அந்நாடுகளில் விற்பனையை அதிகப்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் அங்கு விற்கும் உணவுப் பொருட்களின் தரம் குறைந்துகொண்டே வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68e2aa7fd190e
செய்திகள்உலகம்

லண்டன் தொடருந்தில் பாரிய கத்திக்குத்துத் தாக்குதல்: 10 பேர் காயம்; 9 பேரின் நிலைமை கவலைக்கிடம்!

பிரித்தானியத் தலைநகர் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்றில் சனிக்கிழமை (நவம்பர் 1) மாலை...

112884270 gettyimages 874899752
செய்திகள்உலகம்

கர்ப்பகால கொவிட்-19 தொற்று: குழந்தைகளுக்கு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் – ஆய்வில் தகவல்!

கர்ப்ப காலத்தில் கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், மூன்று வயதை அடையும்போது நரம்பியல்...

trum carney 1761276773407 hpMain 16x9
செய்திகள்உலகம்

சர்ச்சைக்குரிய விளம்பரம் காரணமா? கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவில் அரசு சார்பில் ஒலிபரப்பப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய விளம்பரத்தைக் காரணம்...

inside grand egyptian museum 77779
உலகம்செய்திகள்

உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் திறப்பு: ‘கிராண்ட் எகிப்தியன் மியூசியம்’ சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்!

எகிப்தில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க தொல்லியல் அருங்காட்சியகமான ‘கிராண்ட் எகிப்தியன் மியூசியம்’ (Grand...