2 11 scaled
உலகம்செய்திகள்

பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த லொட்டரிச்சீட்டு: ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ள கனேடிய பெண்

Share

பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த லொட்டரிச்சீட்டு: ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ள கனேடிய பெண்

தன் கணவர் தனக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த லொட்டரிச்சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ளார் கனேடிய பெண் ஒருவர்.

கனடாவின் மனித்தோபா மாகாணத்தின் தலைநகரான வின்னிபெகில் வாழும் கிறிஸ்டல் (Krystal McKay), தனது கணவரான லாரன்ஸிடம் (Lawrence Campbell), லொட்டரிச்சீட்டு ஒன்று வாங்கிவரும்படி பல வாரங்களாகவே கூறிக்கொண்டிருக்க, ஒருநாள், கிறிஸ்டலுக்கு பிறந்தநாள் பரிசாக லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் லாரன்ஸ்.

பிறந்தநாள் பரிசாக வந்த அந்த லொட்டரிச்சீட்டோ, கிறிஸ்டலின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம், அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 5 மில்லியன் டொலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரியாகிவிட்டார் கிறிஸ்டல்.

பெரும்பாலான சாதாரண மக்களைப்போலவே, சொந்தமாக ஒரு வீடு வாங்கவேண்டும் என்பதுதான் கிறிஸ்டல் குடும்பத்தினரின் ஆசை. அத்துடன், டிஸ்னி லேண்டுக்கு சுற்றுலா செல்லவேண்டும் என்ற ஆசையும் உள்ளது, அதையும் நிறைவேற்றவேண்டும் என்கிறார் கிறிஸ்டலின் கணவரான லாரன்ஸ்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...