உலகம்செய்திகள்

கைகோர்ப்போம், துயர்துடைப்போம்! கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேட்டுக்கொள்கிறேன் – நடிகர் விஜய்

4 5 scaled
Share

கைகோர்ப்போம், துயர்துடைப்போம்! கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேட்டுக்கொள்கிறேன் – நடிகர் விஜய்

மீட்புப் பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உதவிகளை செய்யுமாறு, நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெருமளவில் தண்ணீரால் சூழ்ந்துள்ளன.

பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆங்காங்கே மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல் சீரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மக்களுக்கு உதவிட, மீட்புப் பணிகளில் மக்கள் நிர்வாகத்தினர் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது பதிவில், ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ”மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில், மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில், தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #கைகோர்ப்போம் துயர்துடைப்போம்’ என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...