சவுதிக்கு எதிராக ஏமன் போர் குறித்து லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
இதை தொடர்ந்து 48 மணி நேரத்துக்குள்ளாகத் தங்கள் நாட்டிலிருந்து லெபனான் தூதர் வெளியேற வேண்டும் என்று சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் கோர்தாஹி உள்நாட்டுச் செய்தி நிறுவனநிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஏமனில் சவுதி செய்யும் போர் அர்த்தமற்றது.
அந்தப் போரை சவுதிஉடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இக்கருத்துக்கு சவுதி அரசாங்கம் தனது கண்டனம் லெபனானுக்கு தெரிவித்தது .
இதனால் லெபனானுக்கும் சவுதிக்கும் இடையிலான உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் லெபனான் தூதர் நாட்டை வெளியேற வேண்டும் என்று சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ஏமன் அமைச்சர்கள் இவ்வாறு பேசுவது தமக்கு புதிதல்ல எனவும் லெபனான் அதிகாரிகள் உண்மைகளைப் புறக்கணித்ததாலும், சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலும் சவுதி வருத்தம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
அத்தோடு லெபனானிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதியிலிருந்து மக்கள் யாரும் லெபனானுக்குப் பயணிக்க வேண்டாம்.
சவுதிக்கான லெபனான் தூதர் 48 மணி நேரத்தில் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#world
1 Comment