உலகம்செய்திகள்

வரியை அதிகரித்து… மீளமுடியாத சேதத்தில் தள்ளுவார்கள்: லேபர் கட்சி குறித்து ரிஷி சுனக் காட்டம்

Share

வரியை அதிகரித்து… மீளமுடியாத சேதத்தில் தள்ளுவார்கள்: லேபர் கட்சி குறித்து ரிஷி சுனக் காட்டம்

அசுர பலத்துடன் லேபர் கட்சி ஆட்சிக்கு வரும் என்றால் முதல் 100 நாட்களில் பிரித்தானியாவை மீளமுடியாமல் சேதத்தில் தள்ளுவார்கள் என ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியா தனது வரிகளையும் எல்லைகளையும் பாதுகாப்பையும் சர் கீர் ஸ்டார்மரிடம் ஒப்படைத்துவிடாது என்றும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ள ரிஷி சுனக், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் வரி உயர்வு உறுதி என்றும் சட்டவிரோத குடியேறிகளை நாட்டுக்குள் அனுமதித்து பிரித்தானியத் தெருக்களில் இனி அவர்களின் நடமாட்டம் எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை பிரித்தானிய மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க செல்ல உள்ள நிலையிலேயே ரிஷி சுனக் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது என்றார்.

லேபர் கட்சியை நம்ப முடியாது என குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், நமது வரிகள், எல்லைகள் மற்றும் நமது பாதுகாப்பை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியை விடவும் 20 புள்ளிகள் லேபர் கட்சி முன்னிலையில் இருப்பதாலும், வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மிக மோசமான தோல்வி ஏற்படும் என குறிப்பிட்டுள்ள நிலையிலேயே ரிஷி சுனக் லேபர் கட்சி தொடர்பில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...