குவைத் – இந்தியா நேரடி விமான சேவை!

விமான சேவைகளும் இரத்து 720x375 1

இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு குவைத் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் இந்த நேரடி விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விமான சேவையை பதிவு செய்வதற்கு Alhosn என்ற செயலியை மூலம் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியிருப்பதுடன், கொவிட் சான்றிதளையும் குவைத் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கொவிட் தொற்று பரவல் அதிகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமான சேவையை குவைத் நிறுத்திவைத்திருந்தது . தற்போது தொற்றின் தாக்கம் குறைவடைந்து, நிலைமை வழமைக்கு திரும்பி வருகின்ற நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

 

 

Exit mobile version