4 2
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் குழப்பம்: துப்பாக்கிச்சூடு : சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

Share

பாகிஸ்தானின்(pakistan) கராச்சியில் நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அதி உயர்பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கராச்சியில் திடீரென நிலநடுக்கம் எற்பட்டதை அடுத்து அங்கு பல பகுதிகளில் குழப்பம் நிலவியது. அதன் தொடர்ச்சியாக கராச்சியில் உள்ள அதி உயர் பாதுகாப்பு கொண்ட மாலிர் சிறையிலும் குழப்பம் வெடித்தது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகள் அறைகளில் இருந்து பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். ஏராளமானோர் ஒரே இடத்தில் கூடி இருக்க, அவர்களில் ஒரு குழுவினர் திடீரென சிறை வாயிலை திறந்து கொண்டு தப்பிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. அங்கே வைக்கப்பட்டு இருந்த ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றிய கைதிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.

இந்த மோதலில் கைதி ஒருவர் கொல்லப்பட, 3 சிறைத்துறை அதிகாரிகள், ஒரு காவலர் படுகாயம் அடைந்தனர். வன்முறையை தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலை சுவரை உடைத்துக் கொண்டு தப்பியோடினர்

தப்பிய கைதிகளில் பலர் கராச்சி நகரின் வீதிகளில் உலாவ தொடங்கினர். இதை தொடர்ந்து, அவர்களை தேடும் பணியில் இறங்கிய அதிகாரிகள் கிட்டத்தட்ட 75 கைதிகளை சிறைபிடித்தனர். தப்பிய பலரில் பெருமளவானோர் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வருபவர்கள்.

நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து தணிக்கை செய்யப்பட்டு கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் போகுவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...