3 scaled
உலகம்செய்திகள்

ஜப்பான் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய பிரபல நடிகர்.. காத்திருந்த அதிர்ச்சி

Share

ஜப்பான் நிலநடுக்கத்தில் இருந்து தப்பித்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ட்வீட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் நேற்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன, சாலைகளில் விரிசல் விட்டன. மேலும் ஒரு மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக சுனாமி அலைகள் தாக்கின.

குறிப்பாக வஜிமா துறைமுகம் பெரும் பாதிப்பை சந்தித்தது. புத்தாண்டு தொடக்கத்திலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஜப்பான் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஜப்பான் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

இதுகுறித்து ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஜப்பானில் இருந்து இன்று வீடு திரும்பினேன். அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் எங்களுக்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் அங்கேயே இருந்தேன்.

பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும். ஜப்பான் மக்கள் இந்த நேரத்தில் உறுதியுடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...