tamilni Recovered 6 scaled
உலகம்செய்திகள்

இனி இஸ்ரேல் -ஹமாஸ் போர் உக்கிரமடையும்… ஆயுதக் குவியல்களுடன் புறப்படும் ஜோ பைடன்

Share

இனி இஸ்ரேல் -ஹமாஸ் போர் உக்கிரமடையும்… ஆயுதக் குவியல்களுடன் புறப்படும் ஜோ பைடன்

கை நீட்டும் தொலைவில் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இனி, இஸ்ரேல் – ஹமாஸ் போர் இறுகும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர். ஹமாஸ் படையினரை மொத்தமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் சூளுரைத்துள்ள நிலையில், அந்த நாட்டுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஜோ பைடன் இஸ்ரேல் புறப்படவிருக்கிறார்.

இந்த நிலையில், தமது மக்களை பாதுகாக்கும் பொருட்டு இஸ்ரேலுக்கு இனி என்ன தேவை என்பதை நேரிடையாக தெரிந்து கொள்ள ஜோ பைடன் விரும்புவதாக அமெரிக்க வெளிவிவகார செயலர் ஆண்டனி பிளிங்கன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

மேலும், பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைக்கும் வகையிலும், ஹமாஸுக்குப் பயனளிக்காமல் காசாவில் மனிதாபிமான உதவிகளைச் செயல்படுத்தும் வகையிலும் இஸ்ரேல் எவ்வாறு செயல்படும் என்பதை தெரிந்துகொள்ள இந்த வாய்ப்பை ஜனாதிபதி ஜோ பைடன் பயன்படுத்துவார் எனவும் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆயுத பலத்தை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மட்டுமின்றி, ஈரான் மற்றும் பிற ஈரான் ஆதரவு குழுக்கள் ஹமாஸ் ஆதரவாக மோதலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும் அமெரிக்கா செயல்பட உள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது 2,000 துருப்புகள், 2,400 கடற்படை சிறப்பு வீரர்கள் மற்றும் 12 போர் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, தகவல் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் போரில் களமிறங்கும் வகையில் 2000 வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா திங்களன்று அறிவித்திருந்தது.

பொதுவாக இதுபோன்ற சூழலில் 96 மணி நேர அவகாசம் எடுத்துக் கொள்ளும் அமெரிக்கா, தற்போது 24 மணி நேரம் போதுமானது என தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஒரே நேரத்தில் இஸ்ரேல் மற்றும் உக்ரைன் போர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்க கூடாது என்ற கோரிக்கையை புறந்தள்ளிய ஜோ பைடன், உலகில் மட்டுமல்ல, வரலாற்றிலேயே நாம் தான் பலம் மிகுந்த நாடு.

நம்மால் இந்த இரு போர்களையும் கவனித்துக் கொள்ள முடியும் என்றார் ஜோ பைடன். இஸ்ரேல் – ஹமாஸ் போரில் அமெரிக்கா வெளிப்படையாக களமிறங்கியிருப்பதால் இனி வரும் நாட்களில் போரின் உக்கிரம் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...