ஜப்பான் பிரதமர் இந்தியாவிற்கு வருகை!!

gallerye 030109868 2754446

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று இந்தியா வந்தடைந்தார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இந்தோ பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இந்த பயணத்திற்கு முன்பாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், ” உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு இந்த பயணத்துடன் ஒத்துப்போகிறது.

இதனால், சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், ஜப்பானும் இந்தியாவும் பல்வேறு விஷயங்களில் இணைந்து செயல்படும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதையும் பிரதமர் கிஷிடா நோக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின்போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தை அவர் அறிவிப்பார் என்று ஜப்பானின் செய்தித்தாள் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#WorldNews

 

 

Exit mobile version