ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் உள்ள நாரா பகுதியில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஷின் சோ அபே உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அபே என்று நாரா என்ற மேற்கு ஜப்பான் பகுதியில் ரயில் நிலையம் ஒன்றுக்கு அருகே மக்கள் முன் உரையாடிக்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் அங்கு துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை தொடர்ந்து உடல் முழுக்க ரத்தத்தோடு அபே சுருண்டு விழுந்துள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபே ரத்தம் வெளியேறி, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரின் நெஞ்சு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் துப்பாக்கி சூடு குறித்த பல்வேறு கலவையான செய்திகள் வெளியாகி வருகின்றன. ஷின் சோ அபே தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். துப்பாக்கியால் சுட்டதாக கருதப்படும் நபரை பொலிஸார் கைது செய்துவிசாரித்து வருகிறார்கள். அவர் உயிருக்கு எதுவும் ஆபத்து உள்ளதா, காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஜப்பான் பிரதமராக இருந் ஷின்ஷோ அபே தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக 2020இல் அறிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை இவர் பிரதமர் பதவியை அலங்கரித்து வந்தார். மொத்தமாக ஜப்பானின் பிரதமராக இவர் 4 முறை இருந்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment