புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரோன் பல நாடுகளில் பரவி வரும் நிலையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை ஜப்பான் தடை செய்துள்ளது.
குறித்த தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
வணிகர்கள், வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக இந்த மாதத் தொடக்கத்தில் நாடு திறந்துவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரோன் வைரஸை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் தங்களது எல்லைகளுக்கு வெளிநாட்டவர்கள் நுழைவதற்கு தடைவிதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment