25 15
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய போர் விமானங்களின் தாக்குதல்: நிலைதடுமாறிய பலஸ்தீனியர்கள்

Share

இஸ்ரேலிய போர் விமானங்களின் தாக்குதல்: நிலைதடுமாறிய பலஸ்தீனியர்கள்

இஸ்ரேலிய (Israel) போர் விமானங்கள் கடந்த சில மணித்தியாலங்களாக தெற்கு லெபனானில் (Lebanon) உள்ள ஹிஸ்பொல்லா இலக்குகளை தொடர்ந்து தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த போர் விமானங்கள் சுமார் 1,000 பீப்பாய்கள் கொண்ட சுமார் 100 ராக்கெட் லாஞ்சர்களைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காசா நகரின் தராஜ் சுற்றுப்புறத்தில் அல்-ஷேக் குடும்பத்திற்கு சொந்தமான வீடு தாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இரண்டு பெண்கள் உட்பட ஆறு பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீனம் (Palestine) மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா ஊழியர்கள் 05 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் (Hamas) எனும் பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

போரில் இதுவரை 44,000க்கும் அதிகமான காசா (Gaza) மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image c7274db4d9
செய்திகள்இலங்கை

பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்‌ஷானி வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்: கடவுச்சீட்டு மோசடி வழக்கில் விளக்கமறியல் நவ. 24 வரை நீடிப்பு!

கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஷாதிகா லக்‌ஷானி பலத்த பாதுகாப்புடன்...

25 68af34b161e7d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவ்வந்தி உடை அணிந்து வழக்காடிய போலி சட்டத்தரணி கைது – பல இலட்சம் ரூபாய் மோசடி அம்பலம்!

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி பாணியில் ஆடை அணிந்து உள்நுழைந்து, வழக்காடித் தருவதாகப் பொதுமக்கள் பலரிடம்...

images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...