கொரோனாவின் புதிய வைரஸ் ஓமைக்ரானைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கான அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் இன்று மாலை மூடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய உருமாற்ற வைரஸான ஓமைக்ரான் கவலைக்குரியது மற்றும் மிகவும் ஆபத்தானது என்பதால் இஸ்ரேலில் சிவப்பு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது..
முதன்முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.
இ்ந்த புதிய வைரஸ் ஏற்கெனவே பல நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கூட இந்த புதிய வைரஸ் தாக்கியுள்ளது.
இஸ்ரேல், கொவிட் காரணமாக நீண்ட காலமாக மூடியிருந்த தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக வேண்டி நான்கு வாரங்களுக்கு முன்புதான் திறந்தது, தற்போதும் மீண்டும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment