28 9
உலகம்செய்திகள்

சிரியாவில் முதல் முறையாக காலடி வைத்து நெதன்யாகு விடுத்த அறிவிப்பு

Share

சிரியாவில் முதல் முறையாக காலடி வைத்து நெதன்யாகு விடுத்த அறிவிப்பு

இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிரியாவில் மாற்று ஏற்பாடு செய்யும் வரையிலும், ஆக்கிரமித்த பகுதியில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

சிரியாவில் போராளிகள் படையால் அந்நாட்டு அதிபர் ஆசாத்தின் ஆட்சி வீழ்ந்த பிறகு, கோலன் ஹைட்சை ஒட்டி சிரியாவில் உள்ள இடையகப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து, அங்குள்ள உயரமான ஹெர்மன் மலைப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து, சிரியாவில் ஏற்பட்ட சூழலை தனக்கு சாதகமாக்கி இஸ்ரேல் தனது எல்லையை விரிவாக்கம் செய்யப் பார்ப்பதாக எகிப்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

எவ்வாறாயினும், கோலன் ஹைட்ஸ் பகுதியில் குடியிருப்புகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு கடந்த வாரம் ஒப்புதல் அளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நேற்று முன்தினம் சர்ச்சைக்குரிய இடையகப் பகுதியில் உள்ள ஹெர்மன் மலை உச்சிக்கு சென்றுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் ஒருவர் சிரியாவிற்கு காலடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை, அதன்போது, 53 ஆண்டுக்கு முன் இதே மலை உச்சியில் இராணுவ வீரராக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாற்று ஏற்பாடு செய்யும் வரை இடையகப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து நீடிக்கும், வெளியேறாது என அறிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு பின்னணியில், இந்த மலை உச்சியில் இருந்து இஸ்ரேலின் வடக்கு பகுதியை கண்காணிக்க முடியும் என்பதால் இந்த இடத்திற்கு இஸ்ரேல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...