1 1 7 scaled
உலகம்செய்திகள்

மொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்குவோம்: இஸ்ரேல் தளபதியின் மிரட்டல்

Share

மொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்குவோம்: இஸ்ரேல் தளபதியின் மிரட்டல்

கடைசி ஹமாஸ் பயங்கரவாதிகளையும் இஸ்ரேல் வேட்டையாடும் என்று உயர்மட்ட இஸ்ரேலிய தளபதி ஒருவர் சூளுரைத்துள்ளார்.

இஸ்ரேல் வான்படையின் உயர்மட்ட தளபதியான தோமர் பார் தெரிவிக்கையில், மொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்கும் வலிமை இஸ்ரேலிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஈரான் மற்றும் அதன் மறைமுக பயங்கரவாத குழுக்களுக்கும் தளபதி பார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் படைகளை சிதறிடித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ள தளபதி பார், நிலத்திலும் நிலத்திற்கடியிலும் அவர்களை வேட்டையாடுவதாக தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை வேட்டையாடியுள்ளதாக குறிப்பிட்ட பார், ஒவ்வொருவரையும் தேடிச் செல்வோம் என்றார்.

மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தமாக செயல்பட இஸ்ரேல் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ள தளபதி பார், எந்த மூலையில் சென்று ஒளிந்துகொண்டாலும் விடுவதாக இல்லை என்றார்.

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலை அடுத்து, லெபனான் மற்றும் யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் களமிறங்க இருப்பதாக பலமுறை அச்சுறுத்தி வருகின்றன.

மட்டுமின்றி, இந்த இரு நாடுகளில் இருந்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் முன்னெடுத்தும் வருகின்றனர். இதனிடையே, நவம்பர் 3ம் திகதி ஈரான் தலைவர் ஹசன் நஸ்ரல்லா லெபனான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெபனானின் எந்த பகுதியையும் எதிரிகள் தாக்க முயல்வது அவர்களின் முட்டாள்த்தனமான முடிவாக இருக்கும் என்றும், பெரும் விலையளிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். மட்டுமின்றி, இஸ்ரேல் மீது ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலை பாராட்டியுள்ள நஸ்ரல்லா, இது புனிதப் போர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...