tamilnaadi 14 scaled
உலகம்செய்திகள்

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் : 200 பேர் பலி

Share

காசா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தொடர் தாக்குதலில் 24 மணி நேரத்தில் 200 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகர் மீது கடுமையான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் காசாவுக்குள் நுழைந்து ஹமாஸ் சுரங்கப்பாதை வளாகத்தை அழித்துள்ளது.

மேலும், பல உடல்கள் சுற்றுப்புறங்களின் இடிபாடுகளில் புதைந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுவதோடு மத்திய காசாவில் உள்ள நுசிராட் முகாம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக மருத்துவர்கள் மற்றும் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் வீடு ஒன்றின் அடித்தளத்தில் உள்ள சுரங்கப்பாதை வளாகத்தை அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளதோடு, அல்-குத்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்த பாலஸ்தீன ஊடகவியலாளர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து கொல்லப்பட்டாதாகவும் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி தொடங்கிய ஹமாஸ் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வராத நிலையில் இதுவரை இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்துள்ளதோடு, இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் 21,507 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...