மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்! பத்திரிகையாளர் உட்பட 6 பேர் மரணம்
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்லில் பாலஸ்தீன ஊடகவியலாளர் உட்பட 6 பேர் பலியாகினர்.
ஹமாஸ், இஸ்ரேல் இடையே தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் காசாவின் வெவ்வேறு பகுதிகளில் ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காசாவின் சுகாதார அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.
பலியான 6 பேரில் ஊடகவியலாளர் அப்துல்லா டார்விஷும் (Abdullah Darwish) ஒருவர். இவர் அல் அக்ஸா (Al-Aqsa) என்ற செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் புகைப்படக் கலைஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார்.
போர் தொடங்கிய கடந்த 7 வாரங்களில் பாலஸ்தீனியரான அப்துல்லா டார்விஷுடன் சேர்த்து மொத்தம் 71 ஊடகவியலாளர்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.