ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும்வரை போர் தொடரும் எனவும் அவர் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் யூதர்களுக்கு எதிராக செயற்பட்ட ஹிட்லரின் நாசிப்படை தளபதிகள், ஈரான் நாட்டு அணுசக்தி விஞ்ஞானிகள், பாலஸ்தீன தலைவர்கள் என பலரை வெளிநாடுகளில் வைத்து மொஸாட் உளவாளிகள் கொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் ஹாமாஸ் தலைவர்கள் பலர் கட்டார், லெபனான் போன்ற நாடுகளில் இருந்தபடி இயங்கிவருவதாகவும் அவர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை தற்போது நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அதில் தாமதம் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.