16 17
உலகம்செய்திகள்

ஈரானை இலக்குவைத்த விசேட பாதுகாப்பு கூட்டத்துக்கு தயாராகும் இஸ்ரேல்

Share

ஈரானை இலக்குவைத்த விசேட பாதுகாப்பு கூட்டத்துக்கு தயாராகும் இஸ்ரேல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்வரும் சில மணித்தியாலங்களில் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்துவார் என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பானது, ஈரான் மீதான எதிர்ப்பை அடிப்படையாக கொண்டமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, தேசிய பாதுகாப்பு செயளாலர் இடாமர் பென்-க்விர் போன்ற தரப்புடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஹிஸ்புல்லாவுடனான மோதல் இப்போது ஈரானுடனான போரின் ஒரு பகுதியாக கட்டமைக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் – சிசேரியாவில் உள்ள நெதன்யாகுவின் இல்லத்தை நேற்று குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை ஒரு படுகொலை முயற்சியாக இஸ்ரேல் கருதுகிறது.

மேலும், ஈரான் அதன் பின்னால் இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்துகிறது. எனினும், இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று ஈரான் கடுமையாக மறுத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...