உலகம்செய்திகள்

காசா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம்

rtjy 247 scaled
Share

காசா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம்

இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலானது தற்போது தரைவழி தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு எல்லைக்கோடு பகுதியில் சிறப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா மீது அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து சுமார் 14 நாட்களாக இரு நாடுகளும் அடுத்தடுத்து பதிலடி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை இஸ்ரேலில் தரப்பில் 1,400 பேரும் காசாவில் 3,478 பேரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

முன்னதாக ஏவுகணைகள், குண்டுகள் மூலம் பெரும்பாலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தங்களின் அடுத்தகட்ட தாக்குதலாக தரைவழித்தாக்குதல் இருக்கும் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.

இந்நிலையில் காசா எல்லையில் சிறப்புப் படையினர் தற்போது ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை தரைவழித்தாகுதலுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...