rtjygg 1 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் ஆயுதங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அனுமதியில்லை

Share

இஸ்ரேல் ஆயுதங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அனுமதியில்லை

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் அவ் ஆயுதங்களை பயன்படுத்த ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கத்தார் பாதுகாப்பு அமைச்சரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ள ஈரானிய பிரதான தளபதி முகமது பாகேரி குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை மாற்றுவதைத் தடுக்குமாறு பிராந்திய நாடுகளை பாகேரி வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் படைகளுடனும் ஈரானுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ள கத்தார் நாட்டில் தான் மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளம் அமைந்துள்ளது.

முன்னதாக காசாவிற்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்ற தரப்பினரையும் மோதலில் ஈடுபடுத்த வழிவகுக்கும் என தளபதி முகமது பாகேரி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், இஸ்ரேல் நிர்வாகத்தின் குற்றங்களின் தொடர்ச்சி, சில நாடுகளின் நேரடி ஆதரவு மற்றும் உதவி ஆகியவை நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள பாகேரி, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக மேலும் சிலர் களமிறங்க வாய்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.

இஸ்ரேலின் போர் குற்றங்களை தடுக்க உடனடியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனவும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான போக்கு எதிர்ப்பு குழுக்களிடமிருந்து ஏதேனும் எதிர்வினை ஏற்பட வாய்ப்பாக அமையும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Share
தொடர்புடையது
12 12
இலங்கைசெய்திகள்

தமிழ்க் கட்சிகளிடம் சுமந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய...

11 11
இலங்கைசெய்திகள்

சர்வதேச உளவுத்துறையின் உதவியுடன் பாதாள உலகம் தொடர்பில் முக்கிய நடவடிக்கை

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 10 பிரபல பாதாள உலகத் தலைவர்களை விரைவாகக் கைது செய்வதற்காக...

10 14
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய...

9 14
இலங்கைசெய்திகள்

கொழும்பில் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கங்காராம விகாரை உள்ளிட்ட கொழும்பின் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்...