1 3
உலகம்செய்திகள்

உயிர் பயம் இருந்தால்… எஞ்சிய காஸா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

Share

ட்ரம்பின் அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ஹமாஸ் படைகள் விவாதித்து வரும் நிலையில், போரில் உயிர் தப்பியுள்ள காஸா மக்களுக்கு இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஸாவின் முதன்மை நகருக்கு மொத்த மக்களும் சென்றுவிட இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், காஸா சிட்டியில் இஸ்ரேல் இராணுவம் உக்கிரமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

அதேவேளை இராணுவம் நகரத்தை மொத்தமாக சுற்றி வளைத்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதி செய்துள்ளார். உயிர் பயம் இருந்தால் காஸா மக்கள் உடனடியாக வெளியேறி, ஹமாஸ் படைகளை தனிமைப்படுத்த வேண்டும் என காட்ஸ் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மட்டுமின்றி, வெளியேறாமல் தங்கியிருக்கும் அனைவரும் தீவிரவாதிகள் எனவும், தீவிரவாத ஆதரவாளர்கள் எனவும் கருதப்படுவார்கள் என்றும் அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, மத்திய காஸாவை மேற்கு கடற்கரையுடன் இணைக்கும் Netzarim corridor-ஐ இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், இஸ்ரேல் இராணுவத்தின் மிரட்டலுக்கு பயந்து எவரேனும் காஸா சிட்டியிலிருந்து தெற்கே வெளியேறுவார்கள் என்றால் இஸ்ரேலிய இராணுவ சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டும். அது, உயிர் பயத்தில் வெளியேறும் பாலஸ்தீன மக்களை கொத்தாக கைது செய்யும் இஸ்ரேலின் சதி திட்டம் என்றே சர்வதேச ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால், தெற்கு காஸாவில் இருந்து வடக்கு நோக்கி மக்கள் பயணிக்க எஞ்சியுள்ள கடைசி பாதையை மூடுவதாக இராணுவம் அறிவித்துள்ள சில மணி நேரங்களில் Netzarim corridor-ஐ இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

60 வயது பாலஸ்தீனியர் ஒருவர் தெரிவிக்கையில், காஸா சிட்டியின் நிலைமை தெற்கு காஸா பகுதியின் நிலைமையிலிருந்து வேறுபட்டதல்ல என்பதால் நான் வெளியேறுவதாக இல்லை என்றார்.

இதே மன நிலையில், பெரும்பாலான காஸா மக்கள் இருப்பதால், அவர்களை தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தி, இஸ்ரேல் இராணுவம் படுகொலை செய்யலாம் என்ற நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.

காஸாவின் எல்லாப் பகுதிகளும் ஆபத்தானவை, குண்டுவெடிப்பு எல்லா இடங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது, இடப்பெயர்ச்சி என்பது திகிலூட்டுவதாக உள்ளது என்பதுடன் அவமானகரமானது என அந்த 60 வயது நபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டாண்டு கால இஸ்ரேல் தாக்குதலில் இருந்து இதுவரை உயிர் தப்பியுள்ள அனைவரும் மரணத்தை எதிர்பார்த்தே காத்திருப்பதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ள கருத்துகள், இஸ்ரேல் இராணுவம் போர் குற்றங்களை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார் என்றே ஹமாஸ் பதிலளித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...