ஈரான் – இஸ்ரேல் போரில் உள்நுழையும் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடர்

24 6622e2010e2d7

ஈரான் – இஸ்ரேல் போரில் உள்நுழையும் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடர்

ஈரானுக்கு இஸ்ரேலின் பதிலடி உறுதி என கணித்திருந்த பிரித்தானிய ஜோதிடர் தற்போது, இந்த மோதலில் 9 நாடுகள் இணையும் என தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிய நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பிரித்தானிய ஜோதிடரான கிரேக் ஹாமில்டன்-பார்க்கர் (Craig Hamilton-Parker) தமது புதிய காணொளி ஒன்றில் இஸ்ரேல் மற்றும் ஈரான் தொடர்பில் பதிவு செய்துள்ளார்.

ஈரான் மீது திடீரென்று இஸ்ரேல் தாக்குதல் முன்னெடுத்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

இதன்படி, ஏப்ரல் 19ம் திகதி ஈரான் தங்களது வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்பாட்டுக்கு கொண்டுவரும் கட்டாயம் ஏற்பட்டது.

இஸ்ரேல் தொடுத்த ஏவுகணை Isfahan நகரத்தை தாக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் ஈரான் மீது கண்டிப்பாக இஸ்ரேல் தாக்குதல் முன்னெடுக்கும் என்பதை ஏப்ரல் 17ம் திகதி தமது காணொளியில் Craig Hamilton-Parker பதிவு செய்திருந்தார்.

வான் வழி தாக்குதல் உறுதி என குறிப்பிட்டிருந்த அவர், ஈரான் மீது தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராவதாக தெரிவித்திருந்தார்.

அதேப் போன்றே இஸ்ரேல் தாக்குதல் முன்னெடுத்துள்ளது. மேலும், இந்த விவகாரம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்றும், இதுவரை தொடர்பில்லாத நான்கு நாடுகள் இந்த மோதலில் களமிறங்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

முதல் நாடாக ரஷ்யா களமிறங்கும் என்றும், ஏற்கனவே ரஷ்யா இந்த விவகாரத்தில் தலையிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவதாக வட கொரியாவும் இஸ்ரேல் – ஈரான் மோதலில் ஒரு தரப்பிற்கு ஆதரவளிக்க உள்ளது என்றார். இதனால், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கும் என்றும், ஏற்கனவே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மோதலில், சீனா மற்றும் ஜேர்மனியும் களமிறங்கும் என்றும், சவுதி அரேபியா மிகப் பெரிய பங்காற்ற உள்ளது என்றும் Craig Hamilton-Parker கணித்துள்ளார். சவுதி போன்று துருக்கியும், எகிப்தும் ஜோர்தானும் களமிறங்க வாய்ப்புள்ளது என்றும், ஆனால் இந்த நான்கு நாடுகளும் போரில் ஈடுபடாமல், அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கும் என்றே கிரேக் ஹாமில்டன்-பார்க்கர் (Craig Hamilton-Parker) கணித்துள்ளார்.

Exit mobile version