rtjy 219 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி இன்று இஸ்ரேல் விஜயம்

Share

அமெரிக்க ஜனாதிபதி இன்று இஸ்ரேல் விஜயம்

உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போரின் திருப்பமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று (18.10.2023) அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்குச் செல்வார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விஜயத்தின் மூலம் தமது மக்களைப் பாதுகாக்கவும் எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும் இஸ்ரேலுக்கு உரிமையும் கடமையும் உள்ளது என்பதை பைடன் மீண்டும் தெளிவுபடுத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தைகைய ஒரு முக்கியமான தருணத்தில் ஜனாதிபதி இஸ்ரேலுக்கு செல்வதன் மூலம் இஸ்ரேலுடனான அமெரிக்காவின் ஒற்றுமையை பைடன் உறுதிப்படுத்துவதாக அமைகிறது என்று பிளிங்கன் கூறியிருந்தார்.

நாளுக்கு நாள் போரின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை சுமார் 4,000 ஐ கடந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காசா அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தாக்குதலில் 100ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது. இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...