tamilni 121 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீனியர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல்

Share

பாலஸ்தீனியர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல்

தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பாலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நிகழ்த்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது.

இந்நிலையில், காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது.

மேலும், தடைசெய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பாலஸ்தீனிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன

காஸா பிராந்தியத்தில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தொடுப்பதாகவே இஸ்ரேல் அறிவித்தது.

எனினும் வடக்கு காஸா உட்பட மக்கள் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குவதாக பாலஸ்தீனியர்களின் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

வெண் பாஸ்பரஸ் குண்டுகள் என்பவை பெரும் நெருப்புக் கோளமாக வெடிப்பவை.

சுமார் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும், நெருப்பையும் உமிழ்பவை.

ஆழ்ந்த தீக்காயங்களுடன் மனிதர்களை நடைபிணமாக முடக்கக்கூடியவை. இவற்றை போரில் பயன்படுத்த சர்வதேச நாடுகள் மத்தியில் தடை விதிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில், தடையை மீறி வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவது போர்க்குற்றமாக கருதப்படும்.

இதற்கு முன்னதாகவும் லெபனான் உள்ளிட்ட நாடுகளின் மீது வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியதான முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினம் அதன்போது மறுப்பு தெரிவித்த இஸ்ரேல், சர்வதேச அழுத்தம் காரணமாக பின்னர் அவற்றை ஒப்புக்கொண்டது.

அதே போன்று இப்போதும் இஸ்ரேல் வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துமெனில், போர் குற்றம் உள்ளிட்ட கூடுதல் பிரச்சினைகளுக்கும் உள்ளாகக் கூடும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...