ஹமாஸ் குழுவினர் கடத்தி சென்ற குழந்தைகளின் நிலை..!
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் கடத்தி சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடத்தி சென்ற குழந்தைகளை துப்பாக்கி முனையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளி தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகபூர்வ x தளத்தில் வெளியாகியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவிக்கையில்,
இந்த குழந்தைகள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் அவர்களது சொந்த வீடுகளில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களது பெற்றோர்கள் அங்கு இருக்கும் அடுத்த அறையில் இறந்து கிடக்கிறார்கள். இவர்களைத்தான் நாம் தோற்கடிக்கப் போகிறோம் என தெரிவித்துள்ளனர்.