rtjy 191 scaled
உலகம்செய்திகள்

காசாவின் எல்லைகளை மூடியது இஸ்ரேல்

Share

காசாவின் எல்லைகளை மூடியது இஸ்ரேல்

காசாவை சுற்றியுள்ள எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் மக்கள் தென்காசாவிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் காசா எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நாட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் அருகில் உள்ள எகிப்து நாட்டிற்குள்தான் செல்ல வேண்டும். இந்த நாட்டிற்குள் செல்ல ஒரே வழி என்றால் அது தென்காசாவில் உள்ள ரஃபா கிராஸிங் எனும் பாதை ஆகும்.

அதனையும் இஸ்ரேல் மூடிவிட்டது. இனிமேல் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் இஸ்ரேலின் அனுமதியை பெற வேண்டும்.” என்று இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...