உலகம்செய்திகள்

ஹமாஸின் முக்கிய தளபதி வான்தாக்குதலில் பலி!

7 5 scaled
Share

ஹமாஸின் முக்கிய தளபதி வான்தாக்குதலில் பலி!

ஹமாஸ் குழுவின் முக்கிய தளபதி வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் 9வது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

இந்த நிலையில், ஹமாஸின் நக்பா பிரிவின் தளபதியான பில்லால் அல்-கெத்ரா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அத்துடன் வடக்கு காஸா மக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்ல வேண்டும் என்றும் பாதுகாப்புப்படை எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் வடக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி என முப்படை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,500க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...