tamilni 116 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதல் திட்டமிட்ட இனப்படுகொலை

Share

இஸ்ரேலின் தாக்குதல் திட்டமிட்ட இனப்படுகொலை

காஸாவில் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என ஸ்பெயின் சமூக உரிமைகளுக்கான அமைச்சர் அயோன் பெலாரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10,000 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் ஸ்பெயின் சமூக உரிமைகளுக்கான அமைச்சரும், தீவிர இடதுசாரி Podemos கட்சியின் தலைவருமான அயோன் பெலரா இஸ்ரேலை கண்டித்துள்ளதுடன், உலகத்தலைவர்களின் வெளிப்படையான இரட்டை நிலைப்பாட்டையும் சாடியுள்ளார்.

அவர் ஊடக சந்திப்பொன்றில், ‘இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக உலகத்தலைவர்கள் செயல்படத் தவறிவிட்டனர்.காஸாவில் பாலஸ்தீனியர்களை கொன்றது திட்டமிட்ட இனப்படுகொலை ஆகும்.

எனவே சர்வதேச சமூகம் இஸ்ரேலுக்கு தடைவிதிக்க வேண்டும்.பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்த திட்டமிட்ட இனப்படுகொலையை இஸ்ரேலிய அரசு நிறுத்த வேண்டும்.

உலகம் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, மற்ற மோதல்களில் மனித உரிமைகள் பற்றி ஏன் நாம் பாடம் கொடுக்க வேண்டும்? ஐரோப்பிய ஒன்றியம் பற்றி எனக்கு நன்றாக தெரிந்ததைப் பற்றி நான் பேசுகிறேன். ஐரோப்பிய ஆணையம் காட்டும் பாசாங்குத்தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினும், பிற நாடுகளும் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

காஸாவில் இருந்து தனது குடிமக்கள் சிலரை வெளியேற்ற முயற்சிக்கும் மேற்கத்திய நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...