இஸ்ரேலின் தாக்குதல்: காசாவில் ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி

14 21

இஸ்ரேலிய தாக்குதல்களில் சனிக்கிழமை இரவு முழுவதும் காசாவில் குறைந்தது 130 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் அதிகரித்த குண்டுவீச்சின் விளைவாக நேற்று வரையிலான ஒரு வாரத்தில் குறைந்தது 464 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தைகளில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டம் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஆனால் இரு தரப்புக்களினதும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் அண்மையில் டோஹாவில் இடம்பெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்த விவாதங்களும், ஹமாஸ் போராளிகளை நாடு கடத்துவதற்கும், படைகளை இராணுவமயமாக்குவதற்கும் ஈடாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டமும் அடங்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விடயங்களை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

இஸ்ரேலின் நிலைப்பாடு மாறாமல் உள்ளது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிமொழி இல்லாமல் பணயக்கைதிகளை விடுவிக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்று ஹமாஸ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருதல், இஸ்ரேலிய துருப்புக்களை வெளியேற்றுதல், காசாவுக்கான உதவி மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல் ஆகியவற்றிற்கு ஈடாக ஹமாஸ் அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க முன்மொழிகிறது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இஸ்ரேலின் அதிகரித்த குண்டுவீச்சின் விளைவாக நேற்று வரையிலான ஒரு வாரத்தில் குறைந்தது 464 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏனினும் இந்த உயிரிழப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version