மேலும் 42 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் இஸ்ரேல்

tamilni 394

மேலும் 42 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் இஸ்ரேல்

தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக 14 இஸ்ரேல் பணயக்கைதிகளுக்கு பதிலாக 42 பாலஸ்தீனக் பணயக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கப்போவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் ஆகிய இரு தரப்புகளுக்குமிடையே மத்தியஸ்தர்களாக செயற்படும் எகிப்தும் கட்டாரும், ஹமாஸ் கொடுத்த பணயக்கைதிகளின் பட்டியலை இஸ்ரேலிடம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக போர் நிறுத்தத்தின் பின் தற்போது இரண்டாம் கட்டமாக பணயக்கைதிகள் பறிமாற்றம் நடைபெறுகிறது.

ஹமாஸ் அமைப்பினர் இதுவரை 240 பணயக்கைதிகளில் 24 பேரை விடுதலை செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக இஸ்ரேல் 39 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version