இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா சூர்யா.. பல வருடங்களுக்கு பிறகு செய்யும் விஷயம்

surya

இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா சூர்யா.. பல வருடங்களுக்கு பிறகு செய்யும் விஷயம்

சூர்யா தற்போது கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அந்த வரலாற்று படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் தற்போது சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43ம் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் பற்றிய ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்க போகிறாராம். இந்த ரோலுக்காக சூர்யா தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

பல வருடங்கள் கழித்து சூர்யா இப்படி நடிக்கிறார் என்பதால் ரசிகர்களுக்கு அது பெரிய ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

Exit mobile version