அதிகரித்துள்ள போர் பதற்றம் : ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

24 6623d67d78123

அதிகரித்துள்ள போர் பதற்றம் : ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நோக்கில் ஈரான் அதிபர் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தது.

நிலவும் பதற்றமான சூழல்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கொழும்பில் உள்ள ஈரான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வராவிட்டால் உமா ஓயா திறப்பு தினத்தை ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version