உலகம்செய்திகள்

இந்தியாவின் அண்டை நாட்டின்மீது திடீர்த்தாக்குதல் நடத்திய ஈரான்: இரண்டு குழந்தைகள் பலி

2 scaled
Share

ஈரான், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலியானதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், ஈரான் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி தாக்கியுள்ளதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஈரான் தரப்போ, பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் போராளிக்குழுவான Jaish al-Dhulm என்னும் அமைப்பின் தளங்களை அழிப்பதற்காகவே தாங்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக விளக்கமளித்துள்ளது.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் பாதுகாப்பு அலுவலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அவ்வப்போது தனது எல்லையோரமாக இருக்கும் போராளிகளுடன் சண்டையில் ஈடுபடுவது உண்டு என்றாலும், அது பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...