3 7
உலகம்செய்திகள்

தனக்கு பின் ஈரானின் அதியுச்ச தலைவர்களாக இருக்கக்கூடிய மூவரை பரிந்துரைந்த அலிகமேனி

Share

இஸ்ரேல் உடனான போரில் தான் கொல்லப்பட்டால் தனக்கு பிறகு யார் ஈரானின் தலைமை மதகுருவாக இருக்கலாம் என்று மூவரை ஈரானின் அதிஉச்ச தலைவர் அயதுல்லா அலிகமேனி(Ali kameni) பரிந்துரைத்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் தாக்குதலில் தற்போது அமெரிக்காவும் களமிறங்கியுள்ளமையானது போரின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகின்றது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “கமேனியை கொல்வது ஈரான் – இஸ்ரேல் பிரச்சினையை அதிகப்படுத்தாது. மாறாக முடிவுக்கு கொண்டு வரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், ‘ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்.

நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது என்றும் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே, ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சவால் விடுத்துள்ளார்.

அதில், “ஈரானின் அண்டை நாட்டைச் சேர்ந்த சர்வாதிகாரி ஒருவர் (ஈராக்கை சேர்ந்த சதாம் உசேன்), இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், அவருக்கு நேர்ந்த கதியை எண்ணிப் பாருங்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் தான் இஸ்ரேல் உடனான போரில் நான் கொல்லப்பட்டால் தனக்கு பிறகு யார் ஈரானின் தலைமை மதகுருவான இருக்கலாம் என மூவரை பரிந்துரைத்துள்ளார்.

தேர்வு செய்யப்பட்ட மூவரில் கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த முடிவை ஈரானின் நிபுணர்கள் சபை மற்றும் மூத்த மதத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தேவைப்பட்டால் விரைவான மாற்றத்திற்குத் தயாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கை போர்க்கால அவசரத்தால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது சாதாரண சூழ்நிலைகளில், ஒரு புதிய உச்ச தலைவரை நியமிக்கும் செயல்முறை பல மாதங்கள் ஆகும். இதில் தீவிரமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

பல வேட்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், நாடு இப்போது போரில் ஈடுபட்டுள்ள நிலையில், இஸ்லாமிய குடியரசு மற்றும் அவரது மரபு இரண்டையும் பாதுகாக்க விரைவான மாற்றத்தை உறுதி செய்ய கமேனி விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...