24 661b6653acc6e
உலகம்செய்திகள்

ஈரானின் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு

Share

ஈரானின் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு

தற்போது ஈரான்(Iran) நடத்தியுள்ள தாக்குதல் நிலை மிகவும் அபாயகரமானது மற்றும் தீவிரமானது என்று இஸ்ரேல்(Israel) பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி(Rear Admiral Daniel Hagar) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈரான் மண்ணில் இருந்து இஸ்ரேலின் மீது ஈரான் நேரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் இஸ்ரேலை நோக்கி அனுப்பும் கொலையாளி ட்ரோன்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.

இது மிகவும் தீவிரமானது மற்றும் அபாயகரமானது.

இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் வானில் எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் ஆளில்லா விமானத்தை விடுவித்ததைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.

மேலும், தற்காப்பு அல்லது தாக்குதல் என்ற எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் தேசம் பலமானது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வலுவாக உள்ளது. மக்கள் வலிமையானவர்கள்.

மேலும், அமெரிக்காவுடன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றூம் பல நாடுகளும் எங்களுக்கு ஆதரவளித்து வருவதைப் பாராட்டுவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...