உலகம்

ஒரு சில நாட்களில்… கசிந்த தகவல்: மத்திய கிழக்கு நோக்கி விரையும் அமெரிக்க போர் கப்பல்கள்

Share

ஒரு சில நாட்களில்… கசிந்த தகவல்: மத்திய கிழக்கு நோக்கி விரையும் அமெரிக்க போர் கப்பல்கள்

ஈரான் இன்னும் ஒரு சில நாட்களில் தாக்குதலை நடத்தும் என்று இஸ்ரேலிய உளவுத்துறையின் புதிய அறிக்கை கசிந்துள்ளதை அடுத்து அமெரிக்க போர் கப்பல்கள் மத்திய கிழக்கு நோக்கி விரைந்துள்ளது.

ஞாயிறன்று ஏவுகணை நீர்மூழ்கி கப்பல் ஒன்றை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி வைக்க அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் உத்தரவிட்டார். அத்துடன் விமானம் தாங்கும் போர் கப்பலான USS Abraham Lincoln மத்திய கிழக்கு நோக்கி விரைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தளபதி ஒருவருடன் லாயிட் ஆஸ்டின் ஆலோசனை முன்னெடுத்த சில மணி நேரங்களில் அமெரிக்கா போர் கப்பலை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பி வைத்துள்ளது.

ஈரானின் ராணுவ தயாரெடுப்புகள் அனைத்தும், மிகப்பெரிய போருக்கான ஒத்திகை என்றே இஸ்ரேல் உளவுத்துறை கருதுவதாக லாயிட் ஆஸ்டினிடம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் படைகளின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு ஈரான் பழி தீர்க்க முடிவு செய்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. பொதுவாக ஒரு தீவிர முடிவெடுக்க ஈரான் பல நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

அந்த வகையில், இஸ்ரேல் மீதான தாக்குதல் இன்னும் சில நாட்களில் முன்னெடுக்கப்படலாம் என்றே உளவு அமைப்புகளின் கணிப்பாக உள்ளது. இந்த நிலையில், எந்த நெருக்கடியான நிலையிலும் இஸ்றேலை பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை என்றே லாயிட் ஆஸ்டின் அறிவித்துள்ளார்.

மட்டுமின்றி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ பலத்தை அதிகரிக்க செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியா பசிபிக் கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்த USS Abraham Lincoln எவ்வளவு விரைவாக மத்திய கிழக்கில் சென்றுவிடும் என்ற தகவல் வெளியாகவில்லை.

சக்தி வாய்ந்த போர் கப்பல்களை அமெரிக்கா இதுபோன்று நகர்த்துவது என்பது மிக மிக அரிதான சம்பவம் என்றே கூறப்படுகிறது. ஈரானின் தாக்குதலை எதிர்பார்த்தே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹிஸ்புல்லா தரப்பு முதலில் துவங்கி வைக்க, ஈரான் அவர்களுடன் இணைந்து தாக்குதலை தொடுக்கும் என்றே தகவல் கசிந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

articles2F4KCbuYEsEEMpFlzcSxAO
உலகம்செய்திகள்

டுபாய் விமான கண்காட்சியில் சோகம்: சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு!

டுபாயில் நடைபெற்று வந்த விமானக் கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவம்பர் 21), இந்திய விமானப்படையின்...

9b2f6990 46c6 11f0 8fec b11f321e9298
செய்திகள்உலகம்

ரஷ்யா – உக்ரைன் போர்: 30 ரஷ்ய வீரர்களுக்கு ஈடாக 1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

ரஷ்யாவிடமிருந்து 1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்களைப் பெற்றதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இது போரில் ஈடுபட்டுள்ள...