அச்சுறுத்தல்களுக்கு ஈரான் பதிலளிக்கும்! ஈரானிய தூதுவர் பதிலடி

24 661ce3ac49581

அச்சுறுத்தல்களுக்கு ஈரான் பதிலளிக்கும்! ஈரானிய தூதுவர் பதிலடி

ஈரான் (Iran) போரை நாடவில்லை என்றாலும் ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் என ஐக்கிய நாடுகளுக்கான (UN) ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி (Amir Saeid Iravani) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அவசர சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“பாதுகாப்புச் சபையானது சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதை தவறிவிட்டது.

இதனால் ஈரானிய அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலுக்கு பதிலளிப்பதை தவிர வேறு மாற்றுவழி இருக்கவில்லை.

தற்போது, பாதுகாப்புச் சபை, சர்வதேச பாதுகாப்புக்கும் அமைதிக்கும் உண்மையான அச்சுறுத்தல்களை கண்டறியும் பொறுப்பை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலிய (Israel) தூதுவர் கிலாட் எர்டன், பிராந்தியத்தையும் உலகையும் சீர்குலைக்கும் அதன் உண்மையான முகத்தை ஈரான் அம்பலப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version