9 30
உலகம்செய்திகள்

உலகின் முதல் ஹைட்ரஜன் குண்டை கண்டுபிடித்த நபர்… 50 ஆண்டுகள் பாதுகாத்த ரகசியம்

Share

அமெரிக்க விஞ்ஞானியான ரிச்சர்ட் எல் கார்வின் என்பவரே அமெரிக்காவின் ஹைட்ரஜன் குண்டை உருவாக்கியவர்.

உலகின் முதல் ஹைட்ரஜன் குண்டை தனது 23 வயதில் வடிவமைத்த கார்வின், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக பொதுவெளியிலிருந்து அவர் தொடர்பிலான தரவுகள் ரகசியமாக வைக்கப்பட்டது.

1952 ஆம் ஆண்டு தனது 23 வயதில் கார்வின் உலகின் முதல் ஹைட்ரஜன் குண்டை கண்டுபிடித்தார். 1951-52 ஆம் ஆண்டில், அவர் லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தில் கோடைகால ஆலோசகராகப் பணிபுரிந்தார்.

பின்னர் அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளம் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இயற்பியலாளர் எட்வர்ட் டெல்லர் மற்றும் கணிதவியலாளர் ஸ்டானிஸ்லாவ் உலாமின் கருத்துக்களை ஒரு செயல்பாட்டு வடிவமைப்பாக மாற்றும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த வடிவமைப்பு உண்மையில் முதல் ஹைட்ரஜன் குண்டு ஆகும், ஐவி மைக் என அதற்கு பெயரிட்டனர். இந்த வடிவமைப்பு நவம்பர் 1, 1952 அன்று மார்ஷல் தீவுகளில் உருவாக்கப்பட்டது. ஆனால் இது ரகசியமாக வைக்கப்பட்டது.

புரட்சிகரமான கண்டுபிடிப்பு என இருந்தபோதிலும், அவரது பெயர் பல ஆண்டுகளாக பலருக்குத் தெரியாமல் இருந்தது. ஹைட்ரஜன் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட விடயம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டதால், அரசாங்க அதிகாரிகள், இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் என ஒரு குறுகிய வட்டத்திற்கு மட்டுமே கார்வினின் பங்களிப்பு பற்றித் தெரியும்.

ஹைட்ரஜன் குண்டின் முன்னோடியாகக் கருதப்படும் எட்வர்ட் டெல்லர், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரிச்சர்ட் கார்வின் பெயரை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தினார். கார்வின் வடிவமைத்தது போன்றே ஹைட்ரஜன் குண்டு உருவாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், எட்வர்ட் டெல்லர் வெளிப்படுத்திய அந்த பதிவு சுமார் 22 ஆண்டுகள் எவர் கவனத்திற்கும் சிக்காமல் போக, ரிச்சர்ட் கார்வின் மீண்டும் கண்டுகொள்ளப்படவில்லை. 2001 ஏப்ரல் மாதம் ரிச்சர்ட் கார்வின் தொடர்பான பதிவு New York Times ஊடாக வெளிவர, நீண்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கான அங்கீகாரம் கிடைத்தது.

அவர் ஓய்வு பெறும் வரை, சர்வதேச வணிக இயந்திரக் கழகத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றினார். மட்டுமின்றி, ஜனாதிபதி பில் கிளிண்டன் வரையில் அமெரிக்காவின் பல ஜனாதிபதிகளுக்கு ஆலோசகராகவும் கார்வின் பணியாற்றியுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க குடிமகன் விருதான ஜனாதிபதி சுதந்திர பதக்கத்தை 2015ல் ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 2025 மே 13ம் திகதி நியூயார்க்கின் ஸ்கார்ஸ்டேலில் உள்ள அவரது வீட்டில் வைத்து 97 வயதான ரிச்சர்ட் எல் கார்வின் மரணமடைந்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...