இந்தியர்களே உக்ரேனில் இருந்து உடன் வெளியேறுங்கள்!!

IndianEmbassy Ukraine WikimediaCommons Utkarsh555 15022022 1200

ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை உடன் வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி அங்குள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

உக்ரைனில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மாணவர்கள் உட்பட அனைவரும் வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் யாரும் அவசியமின்றி உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#WorldNews

 

 

Exit mobile version