இந்தியாவின் சிறந்த விமான சேவை நிறுவனம் எது? உலகளவில் எத்தனையாவது இடம்
கொரோனா காலத்திற்கு பிறகு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பழைய நிலைக்கு திரும்பியுள்ளன.
உலகின் சிறந்த விமான சேவை நிறுவனங்களுக்கு ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள் 2024 (Skytrax World Airline) அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒன்லைன் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற கருத்துக்கணிப்பில் மூலம் World Airline விருதுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இந்த பட்டியலில் உலகளவில் சிறந்த விமான சேவை நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) மற்றும் மூன்றாம் இடத்தில் எமிரேட்ஸ் (Emirates) நிறுவனங்கள் உள்ளன.
இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனத்தின் விமான சேவையான விஸ்தாரா (Vistara) 16 -வது இடத்தில் உள்ளது.
அதோடு, இந்த விஸ்தாரா ஏர்லைன் நிறுவனமானது சிறந்த ஊழியர்கள் சேவை விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் சிறந்த விமான சேவை நிறுவனமாக Vistara இடம்பிடித்துள்ளது.