28 11
உலகம்செய்திகள்

ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்

Share

ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷ்யாவின் (Russia) – ட்வெர் பகுதியில் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை சேமித்து வைத்திருந்த ஆயுத கிடங்கை உக்ரைன் ஆளில்லா விமான (drone) தாக்குதல் மூலம் அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ட்வெர் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள நிகோபோல் நகரின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 03பேர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் உக்ரேனியப் படைகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை மீட்பதற்கான ரஷ்யாவின் எதிர்த்தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என அப்பகுதியில் அமைக்கப்பட்ட உக்ரைனின் இராணுவ நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குர்ஸ்க், பிரையன்ஸ்க், ஸ்மோலென்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பகுதிகளில் உக்ரைன் எல்லை மற்றும் அண்டை நாடான ஓரியோல் பகுதியில் 27 உக்ரேனியஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...