உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி: இந்திய பிரதமர் செய்த செயல்
இந்திய அணி உலகக்கோப்பையை தவறவிட்டதால் கலங்கிப்போயிருந்த நிலையில், இந்திய பிரதமர் செய்த ஒரு செயல் கவனம் ஈர்த்துள்ளது.
இந்திய அணி உலககோப்பையை தவறவிட்டதால் கலங்கி நின்ற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி திடீரென வீரர்களின் உடைமாற்றும் அறைக்குள் நுழைந்துள்ளார்.
தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்தவர் என்ற பெருமை கிடைத்தும், கோப்பையை தவறவிட்டதால் கவலையடைந்திருந்த இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை அணைத்து, அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார் பிரதமர் மோடி.
தன்னை பிரதமர் அணைத்து ஆறுதல் கூறும் புகைப்படங்களை எக்ஸில் வெளியிட்டுள்ள ஷமி, தங்களுக்கு ஆதரவளித்த இந்தியர்களுக்கும், உடை மாற்றும் அறைக்கே வந்து ஆறுதல் கூறிய பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், இந்திய அணி தோல்விலியிருந்து மீண்டும் உற்சாகத்துடன் எழும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், எப்போதுமே நாங்கள் உங்களுடன் இருப்போம் என்று கூறி, இந்திய அணியை உற்சாகப்படுத்தியுள்ளார்.