tamilni 612 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியது

Share

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியது

மாலைதீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய இராணுவம் வெளியேறிய நிலையில் அந்த இடத்திற்கு திறமை வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டள்ளனர்.

மாலைதீவில் உள்ள இந்திய இராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

மார்ச் 10-ம் திகதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்தில் இருக்கும் இராணுவ வீரர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்,மே 10-ம் திகதிக்குள் மற்ற இரண்டு விமானப் படைத் தளங்களில் உள்ள இராணுவ வீரர்களும் திரும்பப் பெறப்பட்டு, தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய படைகளுக்கு பதிலாகவும், மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியா வழங்கிய ஹெலிகொப்டர்களை கையாளவும் முதல் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் மாலைதீவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது சீனு கானில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளுக்குப் பதிலாக ஹெலிகொப்டரை இயக்கும் குழுவினர் மாலைதீவு வந்தடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது.

இதற்கிடையில், லாமுகன் கத்தூ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகொப்டர் பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும், மாற்று ஹெலிகொப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை தொழில்நுட்ப பணியாளர்கள் குழுவிடம் தங்களது பணியை ஒப்படைக்கும் நடைமுறையை தொடங்கினர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...