16 10
உலகம்செய்திகள்

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஐ.பி.எல் தொடர் குறித்து வெளியான தகவல்

Share

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஃப்ளே ஒஃப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட் கோல்ட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஒரு வார காலத்துக்குப் பின்னர் இந்தியாவினால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை நடத்த முடியாவிட்டால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் குறித்த போட்டிகளை தங்களால் நடத்த முடியும் என ரிச்சட் கோல்ட் பரிந்துரை முன்வைத்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தும் சாத்தியம் நிலவுவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...