ஆசியக்கிண்ண மகளிர் கிரிக்கட் முதல் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதல்

19 4

ஆசியக்கிண்ண மகளிர் கிரிக்கட் முதல் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதல்

ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய (India) மகளிர் கிரிக்கெட் அணி நேற்று இலங்கையை வந்தடைந்தது.

இந்தநிலையில் ஏனைய நாட்டு அணிகளும் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இந்தப்போட்டிகள் தம்புள்ளையில் ஜூலை 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

போட்டியின் ஆரம்ப நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் போட்டி இடம்பெறவுள்ளது.

அதே நாளில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நேபாள அணிக்கு இடையிலான ஆட்டமும் இடம்பெறும்.

இந்த ஆசியக்கிண்ணப்போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபரில் பங்களாதேஸில் இடம்பெறவுள்ள மகளிர் உலகக்கிண்ண போட்டிகளுக்கான தயார் நிலையை கருதியே நடத்தப்படுகின்றன.

Exit mobile version